ஒருநாள் பாடசாலைக்கு செல்லாத சிறுமி: அதிபருக்கு வந்ததே கோபம்
ஒரு நாள் பாடசாலைக்கு செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை தடியால் தாக்கிய அதிபர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
ஆனமடுவ கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பணம்
அதன்படி, தாக்குதல் நடத்திய அதிபர் தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியாவார்.
இந்தச் சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமி, முந்தைய நாள் பாடசாலைக்கு செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த தடியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி சிறுமியின் பெற்றோர், ஆனமடுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
அதன்படி, ஆனமடுவ காவல் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
