காயமடைந்தால் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுங்கள் -பாதுகாவலருக்கு உத்தரவு
afghanistan
taliban
gunfire
By Sumithiran
காபூலை விட்டுச் செல்லும் போது தனது மனைவி , மகள் உள்ளிட்டோரின் புகைப்பட அடையாளங்களை அழித்துவிட்டுச் சென்றதாக பஞ்ச்ஷீர் உள்ளூர் போராளி குழுவின் தலைவராக உள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அமேருல்லா சாலேஹ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானை விட்டுத் தப்பிச் செல்லாமல், தாம் பஞ்ச் ஷீர் பகுதிக்கு சென்றது குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இதனை விளக்கியுள்ளார்.
தலிபானிடத்தில் ஒருபோதும் சரண் அடையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும், ஒருவேளை தாம் காயம் அடைந்துவிட்டால் நெற்றியில் துப்பாக்கியை வைத்து 2 முறை சுட்டுவிடும்படி தனது பாதுகாவலரிடம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.