சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நாமல்
கென்யாவுக்கு விசேட விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) மறுத்துள்ளார்.
கென்யா தலைநகருக்கு பயணிகள் விமானத்திலேயே தான் பயணம் செய்ததாகவும், விசேட விமானத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ச கென்யாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்கு சிறிலங்கன் விமானத்தின் விமானமொன்றை முழுமையாக முன்பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அவர், கென்யாவுக்கான விஜயத்தின் போது விளையாட்டு, சுற்றுலா மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு சமூகங்களுக்கிடையிலான நட்புறவை மேலும் வளர்க்கவும் பல பயனுள்ள கூட்டங்களில் பங்கேற்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.