உக்ரைன் போர் நிறுத்தத்தில் ஆர்வம் காட்ட மறுக்கும் புடின்: பிரித்தானியாவுடன் மற்றுமொரு நாடு குற்றச்சாட்டு
உக்ரைன் (Ukraine) போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக முக்கிய இரு நாடுகள் குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளன.
பிரித்தானிய வெளியுறவுச் செயலரான டேவிட் லாமி மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட்டும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
போர் நிறுத்தத்துக்கான நிபந்தனை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர், “உக்ரைன் மூன்று வாரங்களுக்கு முன்பே போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், ரஷ்யா இப்போது அமெரிக்காவுக்கு ஒரு பதிலைக் கூறியாக வேண்டும். அத்துடன், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கம் எதுவும் ரஷ்யாவுக்கு இருப்பது போல் தெரியவில்லை.
சமீபத்தில் புடின் 160,000 பேருக்கு கட்டாய இராணுவ சேவை அளிப்பது குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
