ரஷ்யாவில் பரபரப்பு : புடின் பதவி விலக்கிய சிறிது நேரத்திலேயே அமைச்சர் உயிர்மாய்ப்பு!!
புதிய இணைப்பு
ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்டு சில மணி நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சரின் உடல் அவரது காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின், ஸ்டாரோவைட்டை போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவில் (Russia) போக்குவரத்து அமைச்சரை ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பதவிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் எல்லைப் பாதுகாப்பு தோல்விகள் தொடர்பாக பல உயர்மட்ட கைதுகள் அரங்கேறியது.
இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவொயிட்டை ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பதவிநீக்கம் செய்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர்
கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்ட ஆணையின்படி, நியமிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே ரோமன் ஸ்டாரோவொயிட் நீக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக இந்த ஆணை நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், ரோமனை நீக்கியதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.
அவருக்கு பதிலாக துணை போக்குவரத்து அமைச்சர் ஆண்ட்ரி நிகிடின் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
பதவி நீக்கம்
பதவி நீக்கம் செய்யப்பட்ட ரோமன் ஸ்டாரோவொயிட்(Roman Starovoit), 2018 முதல் 2024ஆம் ஆண்டுவரை உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தென்மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.
ஆனால், 2023ஆம் ஆண்டு ஆகத்து மாதம் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் எதிர்பாராத விதமாக ஊடுருவியதைத் தொடர்ந்து, ஆளுநராக இருந்த ஸ்டாரோவொயிட்டின் பதவிக்காலம் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
