ஈரானுக்கு நிரந்தர நண்பனான ரஷ்யா...! அமெரிக்காவிற்கு புடினின் மறைமுக எச்சரிக்கை
பாரசீகப் புத்தாண்டான நவ்ரூஸ் (Nowruz) பண்டிகையை முன்னிட்டு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, ரஷ்யா எப்போதும் ஈரானின் உண்மையான நண்பனாகவும் நம்பிக்கைக்குரிய பங்காளியாகவும் நீடிக்கும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய அமெரிக்க - இஸ்ரேலிய போர்க்கால இன்னல்களை ஈரானிய மக்கள் மிகுந்த கண்ணியத்துடன் கடந்து வருவார்கள் என்று தான் நம்புவதாகப் புடின் குறிப்பிட்டுள்ளார்.
போர்ப் பதற்றம்
இந்தநிலையில், ஈரான் மீதான இந்தத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாகக் கண்டித்து வரும் ரஷ்யா, சர்வதேச அரங்கில் ஈரானின் மிகச்சக்திவாய்ந்த இராஜதந்திரத் தூணாகத் தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில் புடினின் இந்த வெளிப்படையான ஆதரவு அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |