வாக்னர் படையினருக்கு புடின் அதிரடி உத்தரவு
வாக்னர் படையிலுள்ளவர்களுக்கு விசுவாச பத்திரம் கட்டாயம் என ரஷ்ய அதிபர் புடின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வாக்னர் படைப்பிரிவின் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான கிரெம்ளின் தனது வலைத்தளத்தில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது
ரஷ்யாவிற்கு மாறாத விசுவாசமுடன்

"ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு துணை நிற்கும் அனைவரும் ரஷ்யாவிற்கு மாறாத விசுவாசமுடன் உழைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
ரஷ்யாவின் தார்மீக மற்றும் நீதி சார்ந்த பாரம்பரியத்தை மேலும் வலுவாக்கும் வகையில் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறது.
புடினின் ஆதிக்கம்

இதன் மூலம் ரஷ்யாவில் உள்ள வாக்னர் மற்றும் பிற தனியார் இராணுவ அமைப்பினரை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள புடின் முயல்கிறார் எனும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.