உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் : புடின் அதிரடி
உக்ரைனுடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகின்றார்.
ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடினார்.
வெளிப்படையான விசாரணை
இந்நிலையில் போரை நிறுத்துவதற்காக டிரம்ப்பின் தூதராக செயல்படும் விட்காப், மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் புடினை சந்தித்து பேசினார்.
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி மூன் ஜே-இன் மீது லஞ்ச புகார் தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளதாவது, உக்ரைனுடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக விட்காப்பிடம் புடின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இதனை பல முறை புடின் தெரிவித்துள்ளதாக அவர் உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
