அணு ஆயுதத்தை பயன்படுத்த தயார் :அச்சுறுத்தும் புடின்
Vladimir Putin
United States of America
Russia
By Sumithiran
ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மொஸ்கோ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அணு ஆயுதப் போரைத் தூண்டக்கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் அமெரிக்கா தவிர்க்கும் என்று நம்புவதாக இதன்போது புடின் தெரிவித்தார்.
ரஷ்ய அணுசக்தி படைகள் தயார்
எனினும் ரஷ்யாவின் அணுசக்தி படைகள் அதற்குத் தயாராக உள்ளன என்பதை அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் போர்க்களத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி எப்போதாவது பரிசீலித்தீர்களா என்று கேட்டதற்கு, புடின் அதற்குத் தேவையில்லை என்று பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி