புடினுக்கு பேரிடி - நட்பு நாட்டில் சுட்டுவீழ்த்தப்பட்டது உளவு விமானம்
ரஷ்ய அதிபர் புடினுக்கு பேரிடியாக, அவரது மதிப்பு மிக்க உளவு விமானம் ட்ரோன் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ந
ட்பு நாடான பெலாரஸில் ரஷ்யாவுக்கான விமான தளத்தில் வைத்து கடைகளில் வாங்கக் கூடிய ட்ரோன்களால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
சுமார் 274 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான இந்த உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் பெலாரஸ் அரசுக்கு எதிரான குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.
கடைகளில் வாங்கக் கூடிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல்
இந்த குழு கடைகளில் வாங்கக்கூடிய ட்ரோன் விமானத்தை, தாக்கும் திறன் கொண்டதாக வடிவமைத்து, இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், தாக்குதல்தாரிகள் தப்பிவிடாமல் இருக்க பெலாரஸ் அரசாங்கம் எல்லைகளை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்குள் தாக்குதல்தாரிகள் பெலாரஸை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
6 உளவு விமானங்களில் ஒன்று வீழ்த்தப்பட்டது
ரஷ்யா மொத்தமாக பயன்படுத்தும் 6 உளவு விமானங்களில் ஒன்று தான் தற்போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குறித்த விமானமானது, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் 12 முறை அந்த நாட்டின் மீது பறந்துள்ளது.
இதனிடையே, அந்த உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதி அருகே ட்ரோன் விமானங்களை கட்டுப்படுத்தும் கருவிகளை பெலாரஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
