ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!
Vladimir Putin
Russo-Ukrainian War
Ukraine
World
By Beulah
மேற்கத்தேய நாடுகளின் ஆதரவு இல்லையென்றால் உக்ரைன் ஒரு வாரத்திற்கு மேலாக போரில் தாக்கு பிடித்திருக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நிதியுதவி
“மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது.
நிதியுதவி மட்டுமல்லாமால், இராணுவ தளபாட உதவிகள் என அனைத்தும் நின்றுவிட்டால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும்.
தற்போது வரை ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், 90ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.” என்றார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி