புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட பத்து பேர் கைது! மக்களையும் தேடும் பொலிஸார்
corona
sri lanka
mullaitivu
By Shalini
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து ஆடைத் தொழிற்சாலை திறப்பதனை தடுப்பதற்காக இன்று காலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பத்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இதேவேளை குறித்த பகுதிக்கு வருகை தந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களை பொலிஸார் தேடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்