சீன வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்
கடந்த ஜூன் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சென் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் சென் கேங் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், அவர் நீக்கப்பட்டதற்கான தெளிவான காரணத்தை சீன அரசு முன்வைக்கவில்லை.
பொது வெளியில் தோன்றவில்லை

சீன வெளிவிவகார அமைச்சர் சென் கேங் கடந்த ஜூன் 25ஆம் திகதிக்குப் பின்னர் பொது வெளியில் தோன்றவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
கடந்த முறை இலங்கை, வியட்நாம் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளை வெளிவிவகார அமைச்சர் சந்தித்த போது, அதன் பின்னர் அவர் எந்த நேரத்திலும் பொது வெளியில் தோன்றவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
பீஜிங் இராஜதந்திர நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கும் இவ்வேளையில், வெளிவிவகார அமைச்சர் 30 நாட்களுக்கும் மேலாக மக்கள் கண்ணில் படாமல் காணாமல் போனது அசாதாரணமான உண்மை என்றும், இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் அனுமானங்களை முன்வைக்கத் தொடங்கினர்.
வெளியுறவு அமைச்சர் மாற்றம்

ஐம்பத்தேழு வயதான சீன வெளிவிவகார அமைச்சர் சென், அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நெருக்கமானவர். வெளிவிவகார அமைச்சு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளில், சீன வெளிவிவகார அமைச்சர் காணாமல் போனது குறித்து ஊடகவியலாளர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதும், அமைச்சர் தொடர்பில் எந்தத் தகவலும் சீன அரச தரப்பால் வெளியிடப்படவில்லை.
தற்போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் வாங் யியை மீண்டும் வெளிவிவகார அமைச்சராக சீனா நியமித்துள்ளது.