எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை மீண்டும் நடைமுறைக்கு
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
QR Code
By Sathangani
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர் (QR) விலக்கு நடைமுறை நாளை (18) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.
இந்த நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரையான காலப்பகுதியில் QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழுங்கும் நடைமுறை இருந்தது.
மத்திய கிழக்கு யுத்தம்
எனினும், இந்தக் காலப்பகுதியில் வாகனத்தின் ஒற்றை இரட்டை இலக்க முறைமை நடைமுறையில் இருந்தது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் யுத்த நிலைமைகள் காரணமாக எரிபொருள் விநியோகத்தை சீர் செய்வதற்காக இந்த QR குறியீடு மார்ச் மாதம்15 ஆம் திகதி காலை 06.00 மணி முதல் இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்