சாரதி அனுமதிப்பத்திரத்திலும் அறிமுகமாகிறது கியூ ஆர் முறை!
சாரதி அனுமதிப்பத்திரங்களில் மாற்றங்களை ஏற்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களில் உள்ள மெமரி சிப்களை நீக்கி கியூ ஆர் குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் ஐம்பத்தேழு லட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த சாரதி அனுமதி பாத்திரத்தில் சாரதி அடையாளம், ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் சாரதி என்பன நினைவக சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன.
ஒஸ்ரியாவில் இருந்து இறக்குமதி

மேலும், இந்த நினைவக சிப் மற்றும் அட்டைகள் ஒஸ்ரியாவில் இருந்து யூரோக்களில் பணம் செலுத்தி இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதேவேளை, தற்போது பொருளாதார நெருக்கடியால் திறைசேரியில் யூரோ இல்லாததால் இந்த அட்டைகளின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அனுமதி

இதன் காரணமாக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல் உள்ளதோடு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் அச்சடித்து அவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நினைவக சிப் முறைமைகளை நீக்கி கியூ ஆர் முறைமைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கதக்கது