பாரிய செலவில் மகாராணியின் இறுதி சடங்கு..! பிரித்தானிய வரலாற்றில் மிகவும் செலவு வாய்ந்த ஒற்றை நாள் நிகழ்வு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பாதுகாப்பு பணிக்கு மட்டும் சுமார் ரூ.7.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஒட்டுமொத்தமாக இறுதி சடங்கிற்காக சுமார் ரூ. 100 கோடி(இந்திய ரூபாய்) வரை செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
பிரித்தானிய வரலாற்றில் மிகவும் செலவு செய்யும் ஒற்றை நாள் நிகழ்வாக எலிசபெத்தின் இறுதி சடங்கு அமைகின்றது எனவும் தெரியவருகின்றது.
பல வெளிநாட்டு தலைவர்களை மகாராணியின் இறுதி சடங்கில் பங்கெடுக்கவுள்ள நிலையில் பாரிய செலவில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.
இறுதி சடங்கில் பங்கேற்கும் ரணில்
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்ற நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இறுதி சடங்கில் பங்கேற்ப்பதற்க்காக இன்று இங்கிலாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.