மகாராணி எலிசபெத்தின் இறுதி கிரியைகள்..! திகதியை அறிவித்தது பக்கிங்ஹாம் அரண்மனை
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
70 ஆண்டுகள் ஆட்சி
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த 8 ஆம் திகதி காலமானார்.
26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியாக மகுடம் சூடினார்.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

