பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்கு! சர்ச்சையில் சிக்கிய ஜஸ்டீன் ரூடோ
பிரதமர்
பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோ (Justin Trudeau) பாடும் பாடல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் திகதி மரணமடைந்தார்.
அவரின் இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோவும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.
உணவகம் ஒன்றில் இசைக்கலைஞர்களுடன்

இந்த நிலையில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக ஜஸ்டீன் ரூடோ லண்டனில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பியானே வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனால் ஜஸ்டீன் ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார். கனடா நாட்டினர் பலரும் சமூகவலைத்தளங்களில் ஜஸ்டீன் ட்ரூடோவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
I actually love a good piano bar. Haven’t gone to one since before COVID, this reminds me I should check one out near me.
— Brian Lilley (@brianlilley) September 19, 2022
PM at the Savoy in London last night singing a little Queen….for the Queen… pic.twitter.com/yyCxIRAbJl
அதில் ஒருவர் "ராணியின் மறைவுக்கான துக்கத்தில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் ஜஸ்டீன் ரூடோ இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அவமானம்" என குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டதாகவும் சிலர் ஜஸ்டீன் ரூடோவுக்கு ஆதரவாக பேசி வருகின்றன