மில்லியின் டொலர் பரிசை அள்ளும் நிகழ்ச்சியில் கோட்டாபய தொடர்பாக கேள்வி
Gotabaya Rajapaksa
Sri Lanka
United States of America
By Sumithiran
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் அமெரிக்காவை தளமாக கொண்ட தொலைக்காட்சியில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ABC தொலைக்காட்சி சேவையின் மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிகொள்ளும் கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியொன்றின், இறுதிச் சுற்றிலேயே போட்டியாளர்களிடம் கோட்டாபய தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது
கோட்டாபய தொடர்பாக கேள்வி
அந்தக் கேள்வியில்“2022ம் ஆண்டு மக்கள் போராட்டத்தினால், நாடொன்றின் அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்திய பெருங்கடலின் மாலைதீவை நோக்கி அவர் பயணித்துள்ளார். இந்த அதிபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு, இரண்டு போட்டியாளர்கள் “இலங்கை” என பதிலளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி