சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை
இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரத்து செய்யப்பட்ட பரீட்சை
இந்த ஆண்டு உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாள் தொடர்பான தேர்வு கடந்த 10ஆம் திகதி நடந்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்பட்டதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உண்மைகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அந்த பாடத்திற்கான புதிய பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        