இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் : இது அரிசிக்கு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Rice
By Sumithiran
இலங்கையில் (sri lanka)அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் தேங்காய் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் நாளாந்தம் இவற்றை பெருமளவு விலை கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது.
குறிப்பாக சிவப்பு அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரிசியின் விலை மேலும் அதிரிகரிக்கும்
இலங்கையில் அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக பெரும்போக நெற்செய்கை பாரிய அழிவை சந்தித்துள்ளது. இதனால் அரிசியின் விலை மேலும் அதிரிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு அரிசியை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசை
இந்த நிலையில் இன்றையதினம்(27) அக்குறச பகுதியில் அமைந்துள்ள கோப் சிற்றியில் 05 கிலோ கிராம் சிவப்பு அரிசியை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
images - daily mirror
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்