தமிழர் பகுதியில் சம்பந்தனுக்கு அஞ்சலி! அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பில் (Batticaloa) தமிழரசுக் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (10) தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிகுடி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சம்பந்தனின் மறைவு
இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இரா.சம்பந்தனின் மறைவு தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R. Shanakiyan) குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |



ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 3 மணி நேரம் முன்
