இனவாதத்தால் நாட்டை படுகுழியில் தள்ள வேண்டாம்! பகிரங்க எச்சரிக்கை
நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக அதிபரின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
மூன்று தசாப்தகால யுத்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் சரிவடைந்து காணப்பட்டது.
தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுவது அவசியமில்லாத ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சனல் 4 விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்குள்ளும் சில தலையீடுகள் காணப்படுகின்றன. சில அரசியல் குழுக்கள் பல்வேறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைக்கின்றன.
அது குறித்து சரியான விசாரணையை நடத்த அரசாங்கம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர்.
இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதிபரின் தலையீட்டின் கீழ் அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அதன் வாயிலாக தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மத்திய நேர செய்தி தொகுப்பில் காண்க