விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யும் இனவாத அரசியல்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் இடித்துரைப்பு

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Sri Lanka Final War
By Dharu Nov 26, 2026 10:55 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், ஜே.வி.பி.யும் ஆயுதமேந்திப் போராடியவர்கள் என்றாலும், இனவாதத்தின் அடிப்படையில் அவர்களை இந்த அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் வேறுபடுத்தி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அழிக்கப்பட்ட துயிலுமில்ல கல்வெட்டுகளுடன் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்

அழிக்கப்பட்ட துயிலுமில்ல கல்வெட்டுகளுடன் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்

வேறுபாடு என்ன

“இன்று இலங்கையின் சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யும் இனவாத அரசியல்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் இடித்துரைப்பு | Racist Politics Banning The Ltt

அதேபோல, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதோ, அவரின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதோ தடையாகக் கருதப்படுகிறது.

எந்தவிதக் கொண்டாட்டங்களையும் அவர் சார்பில் முன்னெடுக்கக் கூடாது எனச் சட்டம் சொல்கிறது.

அப்படியிருக்கையில், ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீரவும், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய பலரும் இன்று தடைசெய்யப்பட்டவர்கள் அல்ல.

ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டவர்கள் என்றாலும், இன்று அவர்கள் தடை செய்யப்பட்டவர்கள் அல்ல.

அப்படியென்றால், விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்வதற்கும், ஜே.வி.பி. அமைப்பைத் தடை செய்யாமல் இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு என்ன?

ஈஸ்டர் தாக்குதல்! கோட்டாபயவைக் கைது செய்வதற்காக கிடைத்துள்ளன ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல்! கோட்டாபயவைக் கைது செய்வதற்காக கிடைத்துள்ளன ஆதாரங்கள்

இதன் பெயரே இனவாதம்

இரு தரப்பும் ஆயுதமேந்தியவர்கள். ஆயுதமேந்திய விடயம்தான் பயங்கரவாதம் என்றால் இரு தரப்பும் தடை செய்யப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யும் இனவாத அரசியல்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் இடித்துரைப்பு | Racist Politics Banning The Ltt

இல்லையென்றால், ஆயுதப் போராட்டம் இல்லாத இந்தச் சந்தர்ப்பத்தில் இரு தரப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கை மையப்படுத்திப் போராட்டத்தை முன்னெடுத்தது.

ஆனால், ஜே.வி.பி. முழு நாட்டையும் பிடிக்கப் போராடியது. இதில் என்ன நியாயம் இருக்கிறது? இதன் பெயரே இனவாதம். இவ்வாறான விடயங்களே நாட்டைப் பிரித்து வைத்துள்ளன” என்றார்.

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018