இந்திய மக்களவை தேர்தல்: தாயை தோற்கடித்த தனயன்
இந்திய மக்களவை தேர்தலில் உத்தரபிரதே மாநிலத்தின் ரே பரேலி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் அவரது மகனான ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரே பரேலி தொகுதியில் சோனியா 2004ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராக
ஆனால் இம் முறை அவர் மக்களவைக்குப் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ரே பரேலியில் போட்டியிட்டார்.
முன்னிலையில் ராகுல்
இன்று 2.15 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை விட 2.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், முன்னிலையில் இருக்கிறார்.
தினேஷ் பிரதாப் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |