பொருளாதார வீழ்ச்சியில் இலங்கைக்கு அடுத்து இந்தியா! ராகுல் காந்தி வெளியிட்ட தகவல்
Rahul Gandhi
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Government Of India
By Kiruththikan
இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதியான ராகுல் காந்தி, பொருளாதாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தைத் சுட்டிக்காட்டும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையுடன் ஒப்பிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலைகள் மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு இரு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வரைபடங்களைப் பகிர்ந்துள்ளார்.
"மக்களை திசை திருப்புவது உண்மைகளை மாற்றாது. இந்தியா இலங்கையைப் போலவே தோற்றமளிக்கிறது,” என்று காங்கிரஸ் தலைவர் பதிவிட்டு, இந்தியா மற்றும் இலங்கைக்கு தலா மூன்று வரைபட தொகுப்பைப் பகிர்ந்துள்ளார்.
Distracting people won’t change the facts. India looks a lot like Sri Lanka. pic.twitter.com/q1dptUyZvM
— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2022