நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை
நுவரெலியா (Nuwara Eliya) நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் (19.02.2025) இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நீதிமன்றுக்கு செல்லும் மக்களை பிரதான நுழைவாயிலில் முன்பாக வரிசையாக நிறுத்தி, அவர்களையும் அவர்கள் எடுத்துச் செல்லும் பொதிகளையும் கடுமையாக சோதனையிடப்பட்ட பின்னரே நீதிமன்றிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பிரதான நுழைவாசலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசரின் தலைமையில் நேற்று (20.02.2025) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
