அரசின் முக்கிய திணைக்களத்திற்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு
Sri Lanka
Sri Lanka Railways
By Sumithiran
2021ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் இலங்கை ரயில்வே திணைக்களம் 10.3 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை ரயில்வே 10.1 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்திருந்தது.
பயணிகள் போக்குவரத்தின் மூலம் ஈட்டிய வருமானம் 53.0 வீதத்தால் குறைவடைந்தமையே இதற்கு முக்கிய காரணம் என மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கை ரயில்வேயின் வருமானம் 2020 ஆம் ஆண்டை விட 2021 இல் 2.7 பில்லியன் ரூபாவாக 41.3 வீதத்தால் கணிசமான அளவு குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் கொவிட் 19 வைரஸ் பரவியதே வருமானம் குறைவதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி