இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் மரணம்: சந்தேகத்தில் காவல்துறையினர்
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ பண்டாரகேவின் மரணம் சந்தேகத்திற்கு இடமானதென காவல்துறையினர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார நேற்று(23) காலை உயிரிழந்துள்ளார்.
இவர் திடீர் சுகவீனம் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இயற்கை மரணம்
இந்நிலையில் பொது முகாமையாளர் பண்டாரகே தங்கியிருந்த அறையின் குளியலறை மற்றும் ஏனைய சில இடங்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய இந்த மரணம் இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் பிரேதப் பரிசோதனை நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதவான் உத்தரவு
நீதவான் உத்தரவு விசாரணை அறிக்கையை எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றிடம் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரது சடலம் அனுராதபுரத்தில் அமைந்துள்ள புகையிரத திணைக்கள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து நேற்று(23) மீட்கப்பட்டுள்ளது.
அத்தோடு வடக்கு புகையிரதப் பாதை நிர்மானப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே பண்டாரகே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |