தொடருந்து ஊழியர்கள் திடீர் பணிப் பகிஷ்கரிப்பு
தொடருந்து ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
தொடருந்து ஊழியர்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திடீர் பணிப் பகிஷ்கரிப்பொன்றை ஆரம்பித்துள்ளனர்.
தொடருந்து தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணிப் பகிஷ்கரிப்பிற்கு, புகையிரத சாரதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
தமது கடமைகளுக்கு பிரசன்னமாவதற்கு எரிபொருள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
22 தொடருந்து சேவைகள் ரத்து
இதேவேளை, இன்றைய தினம் அலுவலக தொடருந்துகள் உட்பட 22 தொடருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்கள் கடமைக்கு அறிக்கையிடவில்லை என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் அலுவலக தொடருந்துகள் உட்பட, ஏனைய பல தொடருந்துகளின் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

