இன்று முதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை
Bandula Gunawardane
Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
Railways
By pavan
நாடளாவிய ரீதியில் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் இன்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபரிடம் பிரேரணை
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.
இதன்மூலம் நாளை (13.09.2023) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான பிரேரணை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்