கனமழையால் நீரில் மூழ்கிய ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலம்
Trincomalee
Sri Lanka
Floods In Sri Lanka
By H. A. Roshan
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தின் கலையரங்கப் பகுதியைச் சூழ்ந்துள்ள இடங்கள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளன.
நேற்று (20.10.2026) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து, குறித்த பகுதி நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையின் கலையரங்க மண்டபம், அனர்த்த காலங்களில் பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைக்கும் இடைத்தங்கல் முகாமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இடைத்தங்கல் முகாம்
இவ்வாறான நிலையில், கனமழை காரணமாக கலையரங்கப் பகுதியைச் சூழ்ந்து நீர் தேங்கியுள்ளமை அப்பகுதியில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி