இடைவிடாது பெய்யப்போகும் மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை
நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மன்னார் , வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்