98 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பம் : நாமல் சுட்டிக்காட்டு

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Rajapaksa Family
By Sathangani Jan 26, 2024 09:51 AM GMT
Report

இந்த வருடத்துடன் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளோம், அடுத்த பரம்பரையும், எனக்கு பின்வரும் பரம்பரையும் துடிப்புடன் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டாறு தெரிவித்திருந்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

“இன்று அதிபர் மகுடத்திற்காக பலதரப்பினர் முயற்சித்து வருகின்றனர். விவசாயிகள் முயற்சிக்கின்றனர், வியாபாரிகள் முயற்சிக்கின்றனர், ஊடக பிரதானிகள், முன்னாள் அதிபர்களின் பிள்ளைகள் என பலதரப்பினரும் முயற்சிக்கின்றனர்.

யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

மக்களுக்கு உரிமைகள் உண்டு

ஆனால் நாம் யதார்த்த நிலையினை புரிந்து கொள்ள வேண்டும். பிரதான கட்சிகள் இன்றி ஏனைய கட்சிகளுக்கு அதிகாரம் வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது மக்களே.

98 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பம் : நாமல் சுட்டிக்காட்டு | Rajapaksa Family Involved In Politics For 98 Years

அவர்கள் எங்கள் வீடுகளுக்கு தீ வைத்தவர்களாக இருக்கட்டும், இந்நாட்டை அழித்தவர்களாக இருக்கட்டும் அதற்கு மக்களுக்கான உரிமைகள் உண்டு. அதனால் நாம் ஒருபோதும் குறிப்பிட்ட சிலருக்கு பயந்து அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டியதில்லை.

நாம் தீர்மானிக்க வேண்டியது, இந்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அன்றி அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்ல என்பதை நான் நம்புகிறேன்.

எனது அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்கிறேன். முன்னிற்க வேண்டிய இடங்களில் முன்னிற்பேன். இப்போது எடுக்க வேண்டிய தீர்மானங்களை நாம் எடுப்போம். தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவைப்போம்.

அரச அதிகாரிகள் மீது ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அரச அதிகாரிகள் மீது ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

2005 இல் ஆட்சியைப் பொறுப்பேற்ற மகிந்த 

உண்மையிலேயே நாடும் மக்களும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் நிறையவே உள்ளன. சிலர் மக்களைக் குறை கூறுகின்றனர், சிலர் 75 வருட அரசியலை குறை கூறுகின்றனர், இன்னும் சிலர் ராஜபக்ச குடும்பத்தினால் தான் 75 வருட சாபம் எனக் கூறுகின்றனர்.

98 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பம் : நாமல் சுட்டிக்காட்டு | Rajapaksa Family Involved In Politics For 98 Years

மகிந்த ராஜபக்ச ஆட்சியைக் கைப்பற்றும் போது 17 பில்லியன் பொருளாதாரத்துடனேயே 2005ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். யுத்தத்துடன் கூடிய ஒரு பொருளாதாரத்தையே பொறுப்பேற்றார்.

பாண் ஒன்றினை 3.50 ரூபாவிற்கு வாங்க 800 மில்லியன் டொலர் கடனாகப் பெற்றது. அதனை 80 மில்லியன் டொலர் வரை நாம் கொண்டு வந்தோம். தனிநபர் வருமானத்தினை இரட்டிப்பாக்கினோம். இவ்வாறு மக்களுக்கு செய்தோம்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை வாழ்த்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை வாழ்த்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

கொவிட் தொற்றினால் பின்னடைவு

கடந்த காலங்களில் எதிர்பாராத விதமாக கொவிட் தொற்றினால் நாம் பின்னடைந்தோம். கொவிட் தடுப்பூசி இட்ட வைத்தியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கும் ஞாபகம் இல்லை கொவிட் என நோய் இருந்ததா என்று. இது எமது நாட்டின் விதமா உலக விதமா என்பது எனக்குத் தெரியாது.

98 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பம் : நாமல் சுட்டிக்காட்டு | Rajapaksa Family Involved In Politics For 98 Years

பல்வேறு சவால்களுக்கு நாம் முகங்கோடுத்தோம். உரப் பிரச்சினை, பொதுமுடக்கம் போன்ற பிரச்சினைகள் எழுந்தன. அப்போது கோட்டாபய ராஜபக்ச உண்மையிலேயே உயிர்களைக் காப்பாற்றினார்.

எமது குடும்பம் இந்த வருடத்துடன் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளன. அடுத்த பரம்பரையும் எனக்கு பின் வரும் பரம்பரையும் துடிப்புடன் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும்” எனத் தெரிவித்தார்.

இந்தியா எமது தொப்புள் கொடி உறவு! உதவிகள் தொடரும் என்கிறார் ஜீவன் தொண்டமான்

இந்தியா எமது தொப்புள் கொடி உறவு! உதவிகள் தொடரும் என்கிறார் ஜீவன் தொண்டமான்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026