இலங்கையில் ஆட்டத்தை ஆரம்பித்தது சீனா
government
unp
rajapaksa
Palitha Range Bandara
black list
By Vanan
சீனத் தூதரகம் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தமையானது சீன அரசு அல்லது சர்வதேசம், ராஜபக்ஷ அரசாங்கத்தை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு சமமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச வங்கியான மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தால் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே பாலித ரங்கே பண்டார ஊடகங்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது.
இந்த அரசை கொண்டு வருவதற்காக சீனா ஒத்துழைப்பை வழங்கியதுடன், அதற்கு பிரதி உபகாரமாக இலங்கையில் தமக்குத் தேவையான இடங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார்.