தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்ச குடும்பம்

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri lanka election 2024 General Election 2024
By Thulsi Oct 11, 2024 07:49 AM GMT
Report

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ) , முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ச தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் அவரது பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கில் மொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் மகிந்த அணி

வடக்கில் மொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் மகிந்த அணி

யாழ். மாவட்டத்தில் போட்டி

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர  ராஜபக்ச மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்ச குடும்பம் | Rajapaksa Including Namal Out General Election

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் (Geethanath Cassilingham), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் உள்ளிட்டோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

காசிலிங்கம் இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வன்னித்தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்...! வேட்புமனு தாக்கல்

யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்...! வேட்புமனு தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கருணா அம்மான் முன்வைத்த குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கருணா அம்மான் முன்வைத்த குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026