விசாரணைகளை திசை திருப்ப ராஜபக்சக்களின் நாடகம் : அம்பலப்படுத்திய அமைச்சர்
தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே ‘2029 ஜனாதிபதி” என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார் என மொட்டு கட்சியினர் கூறிவருவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
2029 இல் நாமல் ஜனாதிபதி
“2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற தகவல் திட்டமிட்ட அடிப்படையிலேயே பரப்பட்டுவருகின்றது. ஜனாதிபதியாவதற்கு முன்னர் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஓரிரு சபைகளிலாவது வென்று ஆட்சி அமைத்திருக்க வேண்டும் அல்லவா? அத்தேர்தலில்கூட அவர்கள் மண்கவ்வினர்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடியில் ராஜபக்சக்களுக்கு எதிராக உள்ள விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சரியான திசையை நோக்கி விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
விசாரணையை திசை திருப்பும் வகையில் பிரசாரம்
எனவேதான் விசாரணை அதிகாரிகளுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் இப்படியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அது பகல் கனவு மாத்திரமே.” -எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
