என்னை தோற்கடிக்க விடுதலைப் புலிகளுடன் ராஜபக்சவினர் அளவளாவினர்! ரணில் தகவல்
ஒரு போதும் தான் ராஜபக்சவினருடன் இருந்தில்லை. எனினும் ராஜபக்சவினர் தன்னை தோற்கடிக்க விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டனர் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணாக்கியன் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.
நான் ராஜபக்ச அணியில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்.
நான், ராஜபக்சவினருடன் இருக்கவில்லை, சாணாக்கியன் தான் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவிடம் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக சந்தித்து, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை பிரதி சபாநாயகராக தெரிவு செய்ய ஆதரவு வழங்குவோம் எனக் கூறியதாக சாணாக்கியன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

