தமிழர்களை வைத்து தேர்தல் வியூகம் அமைக்கும் ராஜபக்சக்கள்! புலிப் புரளியை கிளப்பும் சதி அம்பலம்

Sri Lankan Tamils M A Sumanthiran Rajapaksa Family Election
By Sathangani Apr 12, 2024 11:15 AM GMT
Report

கடந்த காலத்தில் ராஜபக்சக்கள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாக தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினைக் கையாண்டனர் என நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு, புலிகள் வந்து விட்டார்கள் என்று புரளியைக் கிளப்புவார்கள். அதன் மூலமாக அரசியல் இலாபமீட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து டக்ளஸ் நேரில் ஆராய்வு

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து டக்ளஸ் நேரில் ஆராய்வு

தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தி

“தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் அதிபர் தேர்தலில் நிறுத்தப்படுகின்றபோது அந்த செயற்பாட்டை மையப்படுத்தி தென்னிலங்கை தீவிரவாத, இனவாத சக்திகள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமன்றி அவ்வாறு ஒன்று சேரும் தரப்புக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்ற நிகழ்வுகளும் அரங்கேறலாம்.

தமிழர்களை வைத்து தேர்தல் வியூகம் அமைக்கும் ராஜபக்சக்கள்! புலிப் புரளியை கிளப்பும் சதி அம்பலம் | Rajapaksas Behind Fielding Tamil Common Candidate

குறிப்பாக, தற்போதைய சூழலில் அரசியல் ரீதியாக தோற்றுப்போயிருக்கின்ற ராஜபக்சக்களுக்கு கூட தமிழ் பொதுவேட்பாளர் விடயம் உயிரூட்டும் ஒரு செயலாகக்கூட மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

ராஜபக்சக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டனர். அதற்காக தமிழர்கள் தரப்பிலிருந்தே ஒருவரை களமிறக்கியும் உள்ளார்கள்.

அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு, புலிகள் வந்து விட்டார்கள் என்று புரளியைக் கிளப்புவார்கள். அதன் மூலமாக அரசியல் இலாபமீட்டுவார்கள்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

போதைப்பொருள் பாவனையாளர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த

நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதால் தமிழர் ஒருவரை அவரது வெற்றிக்காக அங்கே கூட போட்டியிடச் செய்தார்கள்.

தமிழர்களை வைத்து தேர்தல் வியூகம் அமைக்கும் ராஜபக்சக்கள்! புலிப் புரளியை கிளப்பும் சதி அம்பலம் | Rajapaksas Behind Fielding Tamil Common Candidate

ஆகவே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் பேசப்படுகின்ற நிலையில் அதற்குப் பின்னணியில் ராஜபக்சர்கள் இருக்கின்றார்களா? சிங்கள, இனவாத சக்திகள் இருக்கின்றனவா என்கிற சந்தேகம் எனக்கு இயல்பாகவே வருகின்றது.

அதுமட்டுமன்றி தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் எமது மக்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு எந்தளவுக்கு பொருத்தமானது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் குறித்த விடயம் சம்பந்தமாக நாம் கட்சியாக இன்னமும் கூடிப்பேசவில்லை. கட்சியாகவே அவ்விடயத்தினை ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தினை அறிவிப்போம்“ எனத்  தெரிவித்துள்ளார்.

வெளிவரவுள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

வெளிவரவுள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025