ராஜபக்சர்களை விரட்டியடிக்க வேண்டும் - மனோ கணேசன் சூளுரை
விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், வரவு செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?
தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யப்போவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அறிவித்தாலும், இந்த அரசு தோல்வி கண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.