பதவி விலகிய பல்கலைக்கழக வேந்தர் - அநுர அரசில் தொடரும் சிக்கல்
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக (Rajarata University of Sri Lanka) வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல் செய்துள்ளார்.
இவர் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் (Anura Kumara Dissanayake) ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கல்லேல்லே சுமனசிறி தேரர், ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின் விகாராதிபதியாவார்.
அபிவிருத்தி அதிகார சபை
அகில இலங்கை சாசனபாதுகாப்பு சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றும் அவர், ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் கல்லேல்லே சுமனசிறி தேரர் ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமனம் பெற்று ஒரு வாரத்தில் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) பணிப்பாளர் சபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம்.ரணதுங்க (N.B.M. Ranatunga ) விலகியிருந்தார்.
இவர் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதன்படி, 3 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த அவர் தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 22 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்