தமிழகத்தில் பரபரப்பு : நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள பிரபல நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (11)சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு இனந்தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை
இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ரஜினியின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு, அது புரளி என தெரிய வந்தது. இருப்பினும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை அண்மைக் காலமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள தொடருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
