ராஜிதவுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்ற சி.ஐ.டியினர்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களம் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனத்திற்கு முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய ராஜித
மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சீன நிறுவனத்தின் 8 மீன்பிடி கப்பல்களை இலங்கைக்கு வரவழைத்தமை மற்றும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் ராஜித சேனாரத்திற்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கே திரும்ப பெறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான இந்த வழக்கை திரும்ப பெறுவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்துள்ள ஊழல் வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு “ஊழல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், தாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதற்கு அமைய வழக்கை திரும்ப பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்