கைவிலங்குடன் விளக்கமறியலுக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜித
புதிய இணைப்பு
நீதிமன்றில் முன்னிலையான ராஜித சேனாரத்னவிற்கு (Rajitha Senaratne) விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஒளிந்து திரிந்த ராஜித சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலை
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளதாக நேற்று (28) அவர் தரப்பு சட்டத்தரணியால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அத்துடன் இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அவருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதேவேளை சந்தேக நபருக்காக நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, வழங்கப்பட்ட அறிவிப்பின்படி அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

