ஆளுநர்களுக்கு அடி வழங்கிய தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் தவறென விமர்சனம்
மக்களால் தெரிவு செய்யப்படும் மாநில அரசின் தீர்மானங்களை, ஆளுநர்கள் புறக்கணிக்கக் கூடாது என்பதற்கு ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை கைதிகளாக இருந்த 6 பேருக்கு இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆதாரமாக உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்ராலின் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, நளினி உட்பட்ட ஆறுபேரையும் பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்ற ஸ்ராலின்,
மனிதநேய விடுதலை
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிட்டிய இந்த விடுதலை மனித உரிமைகளுக்காக அயராது பாடுபட்ட அனைவருக்கும் உரிய விடுதலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்துக்குச் சென்ற நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் தவறென விமர்சனம்
இந்த நிலையில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த விடுதலை முற்றிலும் தவறானதென கொங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம்
செயற்பட்டுள்ளதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.