இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள் (அத்தியாயம் - 07)

Sri Lankan Tamils Rajiv Gandhi India Indian Peace Keeping Force
By S P Thas Dec 04, 2023 01:56 PM GMT
Report

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் சிறிலங்காவின் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்னாவுடன் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இலங்கையில், குறிப்பாக தலைநகர் கொழும்பிலும், இலங்கையின் தென் பகுதிகளிலும் பாரிய எதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

சிறிலங்கா அரசுடனான பிரச்சினையில் நேரடியாச் சம்பந்தப்பட்டிருந்த ஈழத்தமிழர்களையும், தமிழ் தலைவர்களையும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்துவிட்டு, இந்தியப் பிரதமரினால் எதேச்சாதிகாரத்துடன் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் உண்மையிலேயே ஈழத்தமிழருக்கு சார்பான எந்தவொரு விடயமும் அடங்கியிருக்கவில்லை.

இப்படி இருந்தும் சிங்கள மக்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததுதான் வேடிக்கை. ஈழத்தமிழருக்கு சார்பாக இந்த நாட்டில் எதுவுமே நடந்துவிடக்கூடாது என்பதில் திண்ணமாக இருந்த சிங்களப் பேரினவாதிகளும், பௌத்த அடிப்படைவாதிகளும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கத் தலைப்பட்டார்கள்.

ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம்

இலங்கையின் தென் பகுதியில் பாரிய கலவரம் வெடித்தது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இராணுவ மரியாதை அணிவகுப்பின்போது, ஷவிஜயமுனி விஜித்த றோகன டீ சில்வா, என்ற சிறிலங்காவின் கடற்படை வீரரால்; தாக்கப்பட்டார்.

இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள் (அத்தியாயம் - 07) | Rajiv Gandhi Murder Ltte India

சிங்கள மக்களாலும், ஈழத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காத இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம், உண்மையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் என்பனவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தவரும், இந்த ஒப்பந்தம் பின்நாட்களில் இலங்கையில் நடைமுறைபடுத்துவதற்கு முன் நின்று உழைத்தவருமான, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.தீட்ஷித் , இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் பற்றி பின்னொருதடவை தெளிவுபடுத்திருந்தார்.

ஈழ மண்ணில் இந்தியப்படைகள் புலிகளுடன் யுத்தம் புரிந்து பலத்த அடி வாங்கிக்கொண்டு தடுமாறியபோது, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஐக்கிய சேவைகள் மன்றத்தில் (United Service Institute) ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

10.03.1989 இல் நடைபெற்ற இந்த மாநாட்டில், ‘இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையினரது குறிக்கோளும், நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஜே.என்.தீட்ஷித் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தியா இலங்கைப் பிரச்சனை

இந்தியப்படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பட்டன, இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்திருந்த உற்காரணிகள் எவை அமைதிப் படை இலங்கையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன- போன்றன பற்றி தனது உரையில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்த கருத்துக்களில் சில: “…எங்களுடைய நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன், எங்களுக்கு நாங்களே செய்துகொண்டிருந்த வித்தியாசமான சோதனை நடவடிக்கை ஒன்றின் வெற்றியை நிச்சயப்படுத்திக்கொள்ளவே நாங்கள் இலங்கைக்கு செல்லவேண்டி இருந்தது.

1972ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிகரித்து வந்த தமிழ் தீவிரவாதத்தை எதிர்கொள்ளுவதற்காக என்று கூறி சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவந்த சில நடவடிக்கைகளின் விளைவாகவே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடவேண்டி ஏற்பட்டது.

இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள் (அத்தியாயம் - 07) | Rajiv Gandhi Murder Ltte India

தனது சொந்தப் பலத்தையும், உள்நாட்டில் அவர்களிடம் இருந்த வளங்களையும் மட்டும் கொண்டு தமிழ் தீவிரவாதத்தை அடக்கிவிடமுடியாது என்பதை சிறிலங்கா அரசாங்கம் உணர்ந்துகொண்டது.

அதேவேளை இந்தியாவில் வாழும் 50 மில்லியன் தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றிய சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு, சிங்களவர்களைப் பெரும்பாண்மையாகக்கொண்ட சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் உதவி கோரவும் தயங்கியது.

இதனால் தமிழ் தீவிரவாதத்தை அடக்குவதற்கு சிறிலங்கா அரசானது வேறு சில சக்திகளிடம் இருந்து உதவிகளைபெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

1978ம் ஆண்டு தொடக்கம் 1986ம் ஆண்டுவரை இலங்கை இராணுவம் தனது படைகளின் எண்ணிக்கையை 12,000 இலிருந்து 35,000 இற்கு அதிகரித்துக்கொண்டது.

 சிறிலங்கா இராணுவம்

அமெரிக்க மற்றும் பிரித்தானிய யுத்தக்கப்பல்களை இலங்கையிலுள்ள கொழும்பு, திருகோணமலை, காலி துறைமுகங்களுக்கு கொண்டுவருவதற்கான சில இரகசிய ஒப்பந்தங்களை அந்த நாடுகளுடன் சிறிலங்கா அரசு செய்துகொண்டது.

இங்கிலாந்தின் இரகசிய தகவல் துறை அமைப்பொன்றை சிறிலங்கா இராணுவம் தனது புலனாய்வு நடவடிக்கைகளுக்கு உதவியாக வரைவழைத்திருந்தது.

அதேபோன்று, சின்பெட்|(Shin Bet), மொஸாட்|(Mossad) போன்ற கூலிப் படைகளின் உதவியையும் சிறிலங்கா இராணுவம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

தனது கடற்படைகளையும், ஊர்காவல் படைகளையும் பயிற்றுவிக்கவென்று கூறி பாக்கிஸ்தானிடம் இருந்தும் உதவிகளைப் பெற்றுவந்தது. ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா|(Voice of America) தனது ஒலிபரப்பை சிறிலங்கா மண்ணில் மேற்கொள்ளுவதற்கும் சிறிலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள் (அத்தியாயம் - 07) | Rajiv Gandhi Murder Ltte India

இதன் மூலம் சக்திவாய்ந்த, அதி நவீன தொலைத்தொடர்புக் கருவிகளை இலங்கையில் நிறுவி, இந்தியாவின் இராணுவ மற்றும் அரசியல் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்கக்கூடியதான அபாயம் எமக்கு அங்கு ஏற்பட்டிருந்தது.

அத்தோடு, இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த பல நாடுகளிடம் இருந்தும் ஸ்ரீலங்கா போர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருந்தது.

இதுபோன்ற சிறிலங்காவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவுமே நாங்கள் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ளவேண்டி ஏற்பட்டது.

இந்தியாவில் இருந்து 15,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஷபியூஜி, போன்று இலங்கையும் இருந்துவிட்டால் இந்தியாவின் தலையீடு இலங்கையில் இல்லாது இருந்திருக்கும்.

ஆனால் இந்தியக் கரையில் இருந்து 18 மைல்கள் தொலைவில் மட்டுமே அமைந்துள்ள இலங்கை நாட்டில் நடப்பவற்றைப் பார்த்து நாம் கைகட்டிக்கொண்டு இருந்துவிடமுடியாது.

அச்சுறுத்தல்கள்

இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறைமைக்கும் நேரடியாகச் சவால் விட்டுக்கொண்டிருக்கும் சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் விடயத்தில் நாங்கள் அக்கறை செலுத்தினால் மட்டும் போதாது.

எமது நாட்டின் பாதுகாப்பிற்கு மறைமுகமாக அச்சுறுத்தல்களை விடுத்துவரும் விடயங்கள் பற்றியும் நாங்கள் அக்கறை காண்பித்தேயாகவேண்டி உள்ளது.

1498ம் ஆண்டு முதல் இந்தியாவின் தென்கரையில் இருந்து இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுவந்த அச்சுறுத்தல்களையும் நாம் இலகுவில் மறந்துவிடக்கூடாது.

விஸ்தரிக்கப்பட்ட எமது கடற்படை, நவீனமயப்படுத்தப்பட்ட எமது விமானப்படை, நுணுக்கங்கள் பல சேர்த்துக்கொள்ளப்பட்ட எமது தொலைத்தொடர்புகள் என்பனவற்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, எமது நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் நாம் திருப்திப்பட்டுக்கொண்டு இருந்துவிட முடியாது.

இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள் (அத்தியாயம் - 07) | Rajiv Gandhi Murder Ltte India

எமக்கெதிரான ஆபத்துக்கள் ஒருவேளை நேரடியான இராணுவத் தலையீடாக அல்லாமல், வேறு ரூபத்திலும் வந்துவிடக்கூடிய சாத்தியமும் உள்ளது.

எமது அயல் நாடுகளில் ஏற்படுகின்ற அரசியல் நிர்ப்பந்தங்களும், சமுக மாற்றங்களும் கூட, எமது நாட்டின் கொள்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏப்படுத்தக்கூடியதான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

இந்தியா இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு இவைகள்தான பிரதான காரணம்…இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ரஜீவின் நிலைப்பாடு

இது இவ்வாறு இருக்க, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று வடக்குகிழக்கு இணைப்பு விடயத்தில் மாற்றுக் கருத்து கொண்டவராகவே இருந்தார்.

இதனை ராஜீவ் காந்தியே தன்னிடம் தெரிவித்ததாக சிறிலங்காவின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்னொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

றொகான் குணராட்ன என்ற பிரபல சிங்கள எழுத்தாளருக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றின் போதே ஜே.ஆர். இதனைத் தெரிவித்திருந்தார்.

ராஜீவ் காந்தி தன்னிடம் பேசும் போது, I don’t want these fellows to have the northeast merged. I will help you’ என்று தெரிவித்ததாகவும், தனக்கு உதவியாக அவர் இந்தியப்படைகளை இலங்கைக்கு அனுப்பச் சம்மதித்ததாகவும் ஜே.ஆர். அந்தச் செவ்வியில் நினைவு கூர்ந்திருந்தார்.

இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள் (அத்தியாயம் - 07) | Rajiv Gandhi Murder Ltte India

மறந்துவிடப்பட்ட ஈழத்தமிழர்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது கேந்திர பாதுகாப்பையும், தனது பிராந்திய வல்லாதிக்கத்தையும் விஸ்தரிக்கும் நோக்கத்துடன்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

புலிகளுக்கோ, ஈழத்தமிழருக்கோ ஒரு விடிவைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அதற்கு சிறிதும் இருந்தது கிடையாது. உண்மையிலேயே இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர், இந்தியாவின் நலனுக்காக விற்கப்பட்டிருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம், அவர்களது தியாகங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் போன்றவற்றின் பெறுபேறுகளை அடகு வைத்து, தனது நலனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இந்தியா மேற்கொண்டிருந்த ஒரு நகர்வே இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம்.

விடுதலைப் புலிகள்

இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாகவோ, அல்லது தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ இல்லை என்று, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் புலிகள் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள்.

ஈழ மண்ணில் இந்தியப் படைகள் ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத அந்த ஒப்பந்தம் இவர்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, ஈழத்தமிழர்களைப் பாதிக்கும்படியான மற்றொரு நகர்வையும் இந்தியா மேற்கொண்டது.

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியது. 30.07.1987ம் ஆண்டு இந்தியப் படைகள், ஷஇந்திய அமைதி காக்கும் படைகள் என்ற பெயரில் ஈழ மண்ணில் கால்பதித்தன.

இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள் (அத்தியாயம் - 07) | Rajiv Gandhi Murder Ltte India

ஒரு மாபெரும் கெரிலாப் போரை அங்கு எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதை எதிர்பார்க்காத சுமார் ஒரு இலட்சம் இந்திய ஜவான்கள், உற்சாகத்துடன் ஈழமண்ணில் வந்திறங்கினார்கள்.

தங்களது வருகை ஆயிரக்கணக்காண ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கப்போகின்றது என்றோ, கோடிக்கணக்கான அவர்களின் சொத்துக்களை நாசமாக்கப்போகின்றது என்றோ அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

இவர்களில் 3000 இற்கும் அதிகமான ஜவான்கள் மீண்டும் உயிரோடு தமது நாட்டிற்கு திரும்பிபோகமாட்டார்கள் என்பதையும், பாவம் அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.  

அத்தியாயம் 1
மோசமான வரலாற்று முடிவை எடுத்த இந்தியா! தலைவர் பிரபாகரனைப் பிடிக்க விரைந்த இராணுவம்

மோசமான வரலாற்று முடிவை எடுத்த இந்தியா! தலைவர் பிரபாகரனைப் பிடிக்க விரைந்த இராணுவம்

 
அத்தியாயம் 2
இந்தியாவிற்கு பிடி கொடுக்காத தலைவர் பிரபாகரன்! முதல் முதலாக செய்த சாத்விகப் போராட்டம்

இந்தியாவிற்கு பிடி கொடுக்காத தலைவர் பிரபாகரன்! முதல் முதலாக செய்த சாத்விகப் போராட்டம்

அத்தியாயம் 3
தலைவர் பிரபாகரனுக்கு எதிராக இந்தியா தீட்டிய சதித்திட்டம்! விரோதத்திற்கு வித்திட்ட பயணம்

தலைவர் பிரபாகரனுக்கு எதிராக இந்தியா தீட்டிய சதித்திட்டம்! விரோதத்திற்கு வித்திட்ட பயணம்

அத்தியாயம் 4
இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்!

இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்!

 
அத்தியாயம் 5
தலைவர் பிரபாகரனின் உண்ணாவிரத போராட்டம்! பொங்கி எழுந்த இந்தியத் தமிழ் மாணவர்கள்

தலைவர் பிரபாகரனின் உண்ணாவிரத போராட்டம்! பொங்கி எழுந்த இந்தியத் தமிழ் மாணவர்கள்

அத்தியாயம் 6
புதுடெல்லியில் தலைவர் பிரபாகரன்: ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதம்

புதுடெல்லியில் தலைவர் பிரபாகரன்: ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015