ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ஈழத் தமிழர்கள் - சிறிலங்கா திரும்பினால் கைது செய்யப்படுவார்களா...!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகிய 4 இலங்கை தமிழர்களுக்கும் தற்காலிக அடையாச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகிய இலங்கையர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று வருவதற்கான அடையாள சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கையை இலங்கை தூதரகம் செய்கின்றது.
இந்த அடையாளச் சான்றிதழ் ஆறு மாதத்திற்கு செல்லுபடியாகும். குறித்த இலங்கையர்கள், இலங்கையர்கள் தானா என்பதை அந்தந்த மாவட்ட கச்சேரி ஊடாக உறுதிப்படுத்திய பின்னரே வழங்கப்படும்.
கடந்த மூன்று தினங்களாக இலங்கை காவல்துறை தரப்பும், இந்திய உள்துறையும் இணைந்து இந்தப் பணிகளை செய்து வருகின்றன என அவர் கூறுகிறார்.