ஞானசார தேரருக்காக காலி வீதியை மறைத்து சம்மணமிட்டு அமர்ந்த தேரர்கள்! அநுராவை சந்திக்க கோரிக்கை

Colombo Galagoda Aththe Gnanasara Thero Protest
By Dharu Oct 15, 2026 12:47 PM GMT
Report

புதிய இணைப்பு 

கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்ய வலியுறுத்திய பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கி வருகைதந்த நிலையில் தற்போது அங்கு வீதிகளை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தரப்பினர் ஜனாதிபதியை நேரில் கண்டு ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குறித்த தரப்பினர் காலிமுகத்திடல் வீதியில் அமர்ந்து ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு 

திசை மாறிய ஞானசார தேரருக்கு ஆதரவான பேரணி! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு 

கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்ய வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட “சிவரட்ட யுக்திய – தேசிய சூளுரை ஏற்பு மற்றும் சுதந்திரப் பேரணி” ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி கண்டியிலுள்ள தலதா மாளிகை வளாகத்திலிருந்து இந்தப் பாதயாத்திரை ஆரம்பமான நிலையில் இன்று கொட்டும் மலைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்தது.

தெமட்டகொடை சந்தி வரை சென்றடைந்த இந்தப் பாதயாத்திரை, தற்போது மாளிகாவத்தை நோக்கிப் பயணித்து வருவதாகவும், அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

பாதுகாப்பு நடவடிக்கை

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஞானசார தேரருக்காக காலி வீதியை மறைத்து சம்மணமிட்டு அமர்ந்த தேரர்கள்! அநுராவை சந்திக்க கோரிக்கை | Rally Support Gnanasara That Took A Different Turn

 முன்னதாக குறித்த பேரணி வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி செல்வதாக திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026