இலங்கை - இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர்
Jaffna
Mannar
Anura Kumara Dissanayaka
India
Ramalingam Chandrasekar
By Thulsi
இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இராமலிங்கம் சந்திரசேகர் இதனைக் கூறியுள்ளார்.
தரைவழிப் பாதையில் உடன்பாடில்லை
எனவே இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதையில் உடன்பாடில்லை என்றும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இராமர் பாலத்தைச் சென்று மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி