அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
காணிப் பிரச்சினை ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இராமநாதன் அர்ச்சுனாவை நாளை மறுதினம் (29.04.2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணொளிகள்
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இளவாலை காவல் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்க அருச்சுனா இராமநாதனை அழைத்த , வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை ,மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அருச்சுனாவை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்ச்சுனா எம்.பி!
இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
காணிப் பிரச்சினை ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவரது துப்பாக்கியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன் இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
காணிப் பிரச்சினை ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில், கொலை செய்யப்போவதாகவும், தலையில் துப்பாக்கியால் சுடுவதாகவும் அச்சுறுத்திய சம்பவம் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்றது.
அது குறித்தான காணொளி சர்ச்சையாகிய நிலையில் இன்றையதினம் (27) வாக்குமூலம் வழங்குவதற்காக இளவாலை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது துப்பாக்கியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - பு.கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம், இளவாலை - பெரியவிளான் பகுதியில் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்